மராட்டிய மாநிலம் நான் தட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு லகான் பண்டாரே என்ற வாலிபருடன் சஞ்சீவானிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். சில சமயங்களில் கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண் தனிமையில் இருந்துள்ளார்.

இதனை அறிந்த மாமியார் தனது மருமகளையும் அந்த வாலிபரையும் கையும் களவுமாக பிடித்து சஞ்சீவானியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே இளம்பெண்ணின் தந்தை உள்பட சில உறவினர்கள் அங்கு சென்று இருவரையும் அடித்து உதைத்தனர். பின்னர் இருவரது கை கால்களையும் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சஞ்சீவானியின் தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.