கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா டி.மல்லிகெரே கிராமத்தில் நிலத்தை பங்கிட்டு கொள்வதை மையமாகக் கொண்டு, இரு மனைவியரின் குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
புட்டசாமி என்பவர், முதல் மனைவி சுகன்யாவுடன் வாழ்ந்து வந்த நிலையில், குடும்பத் தகராறால் அவர் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் புட்டசாமி பாக்யா என்பவரை இரண்டாவது மனைவியாக திரும்பத் திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் பிள்ளைகள் உள்ள நிலையில், புட்டசாமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது 6 ஏக்கர் நிலத்தை பங்கிட்டு கொள்வது தொடர்பாக இரு மனைவியரின் குடும்பத்தினர் இடையே வாதம் அதிகமாகியது.
ஊர்த்தலைவர்கள், முதல் மனைவியின் பிள்ளைகள் ராகேஷ், ரோஜா ஆகியோருக்கு 4½ ஏக்கர் மற்றும் பாக்யாவுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க ஒப்புதல் கூறிய போதிலும், ராகேஷ்–ரோஜா இதனை மறுத்தனர். போலீசில் புகார் அளிக்க, விசாரணையின் பின்னர் பாக்யாவுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
View this post on Instagram
“>
இந்த நிலத்தை பாக்யா உறவினருக்கு குத்தகைக்கு விட்ட நிலையில், அந்த பகுதி பயிரிடப்பட்டது. இதை எதிர்த்த ரோஜா, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பாக்யாவின் நிலத்துக்கு வந்து பயிர்களை பிடுங்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பும் சண்டையில் ஈடுபட்டனர்.
சம்பவத்தின் போது , பாக்யா தனது கணவரின் முதல் மனைவியின் மகளான ரோஜாவை சேற்றில் தள்ளி, மேலே அமர்ந்து கைகளால் அடித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.
இதுகுறித்து இருவரும் மாறி மாறி போலீசில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, ரோஜா உட்பட 4 பேர் மீதும், பாக்யா உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சம்பவம் தற்போது கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
