சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, தீபாவளி சக்கரம் போல சாலையில் சுற்றிச் சுற்றி சுழல்கின்றன. விபத்துப் படமாக இல்லாமல், இரண்டு வாகனங்களும் ஒருவரை ஒருவர் விட்டுவிடாமல் ஒட்டிக்கொண்டு சுற்றுவதைக் காணும் மக்கள், “இது காதல் காட்சி போல இருக்கே!” என்று கிண்டலாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோ ஜெய்பூர் கஜல்வா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது. அதில் ஒருவர் “இவர்கள் காதலிக்கிற பைக்குகள் போல இருக்குது” என்று சொல்ல, இன்னொருவர் “தீபாவளிக்கு சக்கரம் சுழல்வது போல மாதிரி இருக்கு” என கமெண்ட் செய்துள்ளார்.
சம்பவ இடம் குறித்து தெளிவாக எந்த தகவலும் தெரியவில்லை, ஆனால் இந்த விசித்திரமான காட்சிகள் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன், மக்களை சிரிக்க வைத்தும், சிந்திக்க வைத்தும் இருக்கிறது.
