தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா(45). இவர் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு தீபம் ஏற்றும் பகுதியில் மேனகா நின்று கொண்டிருந்தபோது திடீரென குரங்குகள் வந்து அவர் மீது பாய்ந்து கையில் கடித்தது. இதனால் மேனகா வலியில் அலறி துடித்தார்.
அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பெண் பக்தர்களையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குமார், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் குரங்குகள் கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று 5 பேரும் வீடு திரும்பினார். இந்த ஒரு மாதத்தில் மட்டும் குரங்குகள் 30க்கும் மேற்பட்ட பக்தர்களை கடித்துள்ளது. இதனால் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட முடியாமல் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு சுற்றி தெரியும் குரங்குகளை பிடிக்க கோவில் இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
