தற்போதைய காலத்தில் தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்துவிட்டது. காலையில் நடைபயிற்சி செய்பவர்களைக் கடிப்பது, விளையாடும் குழந்தைகளைத் துரத்துவது, வீட்டின் முன்பு அசுத்தம் செய்வது போன்ற பிரச்சினைகளை மக்கள் சந்திக்கின்றனர். இந்நிலையில்  இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீனி என்ற பெண்மணி ஒரு எளிய மற்றும் புதுமையான யுக்தியைக் கண்டுபிடித்துள்ளார். இந்த முறை மிகவும் எளிமையானது மட்டுமல்ல, செலவும் குறைவு என்பதால் அனைவரும் எளிதில் பயன்படுத்தலாம்.

அதாவது துணிகளுக்கு பயன்படுத்தப்படும் நீலத் திரவத்தை தண்ணீரில் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி, அதை வீட்டின் முன்பு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதனால்  நாய்கள் அந்தப் பகுதியை நெருங்குவதை நிறுத்திவிட்டன. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினரும் இதே முறையைப் பின்பற்றி, தங்கள் வீட்டு வாசலில் நீலத் திரவம் கலந்த பாட்டிலை வைத்தனர். இதன் காரணமாக, அந்தப் பகுதியில் நாய்களின் தொல்லை முற்றிலும் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு காரணம் நிலா நிறத்தை பார்த்தால் நாய்களுக்கு கண்களில் ரத்த நீலம் கசிவது போன்று தோன்றுமாம்.

விடியோவை காண
https://www.threads.com/@duraibabu_subramaniyam/post/DNsurGnZDRe