மேற்கு திசை காற்றின் வேக மாற்றத்தின் காரணமாக நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டைகள் சேகரித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் — அஸ்பியா பானு (13) மற்றும் சபிகா பானு (10) ஆகியோர் மின்னல் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், வழியிலேயே உயிரிழந்தனர். இந்த துயரமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
