மதுரை பாரப்பத்தியில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, அரசியல் வரலாற்றில் புதிய பரிணாமத்தை உருவாக்கியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற தலைப்பில் புது பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் துடிப்பையும், மக்களுக்காகவும் எழுந்திருந்த உறுதியையும் பிரதிபலிக்கும் வகையில், இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளன. “பெரியாரின் பேரன், தமிழ்நாடே ஆடிப்போகும்” போன்ற வரிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேடையில் விஜய் உரையும் கூட்டத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. “என் நெஞ்சில் குடியிருக்கும்” என துவங்கி, ஒரு ராஜா, தளபதியை தேர்ந்தெடுக்கும் கதை மூலம் நேர்மை, உண்மை மற்றும் மக்களின் அதிகாரம் குறித்து வலியுறுத்தினார்.

பாஜக தான் கொள்கை எதிரி, திமுக தான் அரசியல் எதிரி என்றும் விஜய் நேரடியாக அறிவித்தார். “சினிமாக்காரன்” என சொல்வதைப் பார்த்து சில நல்ல தலைவர்களை தோற்கடித்தது சினிமா இல்லை, தவறான அரசியல்வாதிகள்தான் எனக் கூறியதும் கூட்டத்தில் அதிர்வலை ஏற்படுத்தியது. இறுதியில், “இங்கு நீங்கள்தான் மன்னன்… தேர்ந்தெடுப்பது தளபதி யாரு?” என்ற வரிகளை முழங்கிய விஜய்க்கு, தொண்டர்கள் முழு களைகட்டிய ஆரவாரத்துடன் “TVK!” என பதிலளித்தனர்.