மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற நிலையில், முடிவுக்கு பின்னர் பரிதாபமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாநாடு முடிந்தவுடன், சில தொண்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து 100-க்கும் மேற்பட்ட நாற்காலிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், தலைவர் விஜய் நேரில் வந்து தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்த ‘ரேம்ப் வாக்’ பகுதியும் சேதமடைந்துள்ளது.

இந்த தகவல் விஜயிடம் வந்ததும், அவர் அதிர்ச்சியடைந்ததோடு மனமுடைந்தும் இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. மக்கள் ஒருமிப்புடன் பங்கேற்ற இந்தப் பிரம்மாண்ட மாநாட்டில் சிலர் சராசரி செயல்களில் ஈடுபட்டது அவரை மிகவும் புண்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒழுங்குமுறை, பொறுப்பு, மற்றும் கலாச்சாரம் என்பது தான் தவெக தொண்டர்களின் அடையாளமாக இருக்க வேண்டும் என விழாவுக்கு முன்பே விஜய் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.