நாட்டெங்கிலும் பொதுமக்களை மகிழ்விக்கக்கூடிய முக்கிய முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற GST கவுன்சில் கூட்டத்தில், 12% மற்றும் 28% வரி விகிதங்களில் இருந்த சில முக்கிய பொருட்களின் வரி குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், செல்போன், நெய், குடை, ஜாம், ஜூஸ் போன்ற நாடு முழுவதும் பெருமளவில் பயன்படும் பொருட்கள் இனி குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், பிரிட்ஜ், ஏசி, சிறிய வகை கார்கள் போன்றவையும் 28% வரியில் இருந்து மீளவுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு நேரடி நன்மை ஏற்படும். வரி விகித மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தவுடன், பல முக்கிய பொருட்களின் விலை குறையும் எனத் தெரியவந்துள்ளது.
