கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தில் பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்தபோது நிலைதடுமாறி நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே தவறி விழுந்தார். இதனை பார்த்ததும் ரயில்வே ஊழியரான ராகவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணை வெளியே தூக்கி காப்பாற்றினார்.

சரியான நேரத்தில் பெண்ணை காப்பாற்றிய ராகவனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவர் அந்த பெண்ணை காப்பாற்றிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.