கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிபு. இவர் வர்க்கலாவில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வருவதோடு, வெளிநாட்டிலும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது அயிரூர் பகுதியை இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வெளிநாட்டு வேலைக்கு செல்ல விசா தருவதாக கூறி ஷிபு எங்க வீட்டிற்கு வர சொன்னார்.
அவர் கூறியதை கேட்டு நானும் அங்கே சென்றேன். அப்போது ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நான் மயங்கியதும் சிபு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல தன்னை மிரட்டி பணம் பறிப்பதற்காக பொய்யான புகார் கொடுத்திருப்பதாக ஷிபுவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரண்டு புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தலைமறைவான ஷிபுவை போலீசார் தேடி வருகின்றனர்.
