சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். ரீல்ஸ் வீடியோ எடுப்பது, லைக்ஸ் வாங்க ஆபத்தில் சிக்கிக் கொள்வது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கண்ணூரில் சாலையில் பள்ளம் இருந்ததால் கார் டிரைவரும், ஸ்கூட்டியில் வந்தவரும் அடுத்தடுத்து பிரேக் பிடித்தனர்.
ஆனால் பின்னால் வந்த கார் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியதால் ஸ்கூட்டரில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
