வேலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாக போகிற நிலைமை வரும்” என்று எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரையை ஆம்புலன்ஸ் ஓட்டுநரை நோக்கி அவர் கூறியதாக வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தக் கருத்து பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறையுடன் தொடர்புடையவர்களை மிரட்டுவது சர்ச்சைக்குரியதாகவும், அரசியல் மரியாதைக்கே தகாததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. வேலூரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெரும்பான்மை மக்கள் பங்கேற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கடுமையான வார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் சூடான விவாதமாக மாறியுள்ளது.

“>