மேற்கு டெல்லி ராஜா கார்டன் பகுதியில் உள்ள மகாஜன் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடைக்குள் சிக்கியிருந்த இவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினாலும், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் களமிறங்கி கடும் முயற்சியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

இதே சமயம், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட லோகேஷ் டகர் என்ற தீயணைப்பு வீரர் காயமடைந்தார். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே இந்த தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த பரிதாப விபத்து டெல்லி மக்களை உலுக்கியுள்ளது.
