விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவர் மோகன்ராஜ். இவர் சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு வகுப்பறையினுள் சென்று அமர்ந்த சில வினாடிகளிலேயே மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் பெஞ்சில் அமர்ந்து சமாளிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததும் அருகில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளியில் மாணவர் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.