தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் கொத்தி கோயிலா என்ற பழங்குடியின கிராமத்தில் மந்திரவாதி என நினைத்து இளைஞரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்தப் பகுதியில் உள்ள சிறுமி பொடியங்கங்கி (15) என்பவர் மஞ்சள் காமாலை நோயால் கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார்.
ஆனால் பழங்குடியின கிராம மக்கள் அதனை ஏற்க மறுத்துள்ளனர். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜு (36) என்ற இளைஞர் பில்லி சூனியம் செய்து தான் சிறுமியை கொலை செய்ததாக நம்பினர்.
ஏற்கனவே அதே ஊரை சேர்ந்த இரண்டு பேருக்கும் மஞ்சள் காமாலை நோய் இருந்ததால் மக்களின் நம்பிக்கை அதிகமானது. எனவே ராஜுவை கொலை செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி திட்டம் தீட்டி சோமையா, பீமய்யா என்ற இரு நபர்கள் உட்பட ஆறு பேர் சேர்ந்து ராஜுவை கட்டையால் அடித்துக் கொலை செய்து அவரது வீட்டின் முன் பகுதியில் வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்தறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த ராஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் தப்பியோடிய ஆறு பேரையும் காட்டுக்குள் சென்று கைது செய்துள்ளனர்.
