போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை. கண்டுகொள்ளாமல் சாலையில் செல்கிறார்கள். சாலை முழுக்க போக்குவரத்து நெரிசலாக உள்ளது. ஆம்புலன்ஸில் உயிர் ஒன்று துடித்துக் கொண்டிருக்க எப்படி வண்டியை ஓட்டிச் செல்வது என்று ஆம்புலன்ஸ் டிரைவர் தவித்துக் கொண்டிருந்தார்.
ഓരോ ജീവനും വിലപ്പെട്ടത്🥰
അപകടാവസ്ഥയിലായ ഒരു ജീവനും കൊണ്ടാണ് ഓരോ ആംബുലൻസും വരുന്നത്. ആംബുലൻസ് വരുന്ന സൂചന ലഭിച്ചാൽ ആംബുലൻസിന് എത്രയും വേഗം കടന്നു പോകാൻ വഴിയൊരുക്കുക എന്നതാണ് നമ്മുടെ കടമ.#keralapolice pic.twitter.com/UnXIatUXxT
— Kerala Police (@TheKeralaPolice) August 10, 2025
இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கி உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க ஆம்புலன்ஸ் முன் வேகமாக ஓடி சென்று வாகனங்களை மகளிர் காவல் நிலைய அதிகாரி அபர்ணா குமார் ஒதுக்கிவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக தொடங்கியது. பெண் காவல் அதிகாரியின் இந்த செயலை உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
