இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் பார்பர் ஷாப் போன்று காணப்படும் ஒரு கடையின் சோபாவில் அமர்ந்திருந்த பெண் தனது தலைமுடிக்கு ஹேர் டிரையரை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த ஹேர் டிரையர் தீப்பிடிக்க தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஹேர் டிரையரை கீழே போட்டுவிட்டார்.
View this post on Instagram
அதன் பின் மீண்டும் அந்த ஹேர் டிரையர் வேகமாக தீப்பிடிக்க தொடங்கி வெடிக்க ஆரம்பித்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட பெண் சுவிச்சை அமர்த்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
