வடமாநிலத்தில் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. டெல்லியில் இந்த பண்டிகையை முன்னிட்டு பணிக்கு வந்திருந்த பெண் காவல்துறை அதிகாரி சாலையில் ஒரு நூதனத்தை கடைப்பிடித்தார். அதாவது ஹெல்மெட் அணியாமல் வந்து வாகன ஓட்டிகள், சிக்னல் தாண்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களை மடக்கிப்பிடித்து ராக்கி கயிறு கட்டினர். மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியையும் வழங்கினர்.

இப்படி எல்லாம் செய்தால் அவர்களுக்கு அபராதம் கிடையாது என்று இல்லை. அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அதனை போக்குவரத்தை கவனிக்கும் ஆண் காவல்துறையினர் விதித்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை டெல்லி சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது.