டெல்லியில், மகளுக்கு காதலன் இருப்பதாக சந்தேகித்த பெற்றோர், அவளை பின்தொடர தனியார் துப்பறியும் நிபுணரை பணியமர்த்திய சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் துப்பறியும் நிபுணர் தன்யா பூரி பகிர்ந்த வீடியோவில், டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் அந்த மாணவியை நான்கு நாட்கள் கண்காணித்தபோது, நான்காவது நாளில் அவள் ஜிடிபி நகர் சென்றதாகவும், அங்கு விபச்சார விடுதிகள் மற்றும் வணிக விலகர்கள் இருப்பது தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தன்யா பூரி விளக்குகையில், “அந்த மாணவி இப்படிச் செய்வதற்குக் காரணம், கூடுதல் ஷாப்பிங் செய்யவும், ஆடம்பர வாழ்க்கைக்குத் தேவையான பாக்கெட் மணி சம்பாதிக்கவும் தான். அவளது கல்லூரி தோழிகள் ஜாரா போன்ற கடைகளில் ஷாப்பிங் போவதும், ஆடம்பர விருந்துகள் மற்றும் சுற்றுலாக்களில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் பெற்றோர் கூடுதல் செலவுக்காசு தராததால், பெற்றோருடன் மால்களுக்கு போகவில்லை” என்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Nitin Bajaj (@nitinbajaj_mog)

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பெற்றோரின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளனர். “பெற்றோர்கள் உளவாளி வைக்க பணம் செலவிட முடிகிறது, ஆனால் மகளின் தேவைக்கு கூடுதல் செலவுக்காசு தர முடியவில்லையா?” என்று ஒருவர் கண்டனம் தெரிவித்தார். மற்றொருவர், “உளவாளி வைப்பதை விட, நேரடியாக மகளுடன் பேசலாம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

சிலர் பெற்றோரின் முன்னுரிமை குறித்தும் சாடியுள்ளனர். “மகளுக்கு காதலன் வைக்க அனுமதி இல்லை, ஷாப்பிங் செய்ய செலவுக்காசு இல்லை, ஆனால் தனியார் புலனாய்வாளருக்கு பணம் கொடுத்து உளவு பார்க்கிறார்கள்… வாவ்!” என ஒருவர் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “குடும்பம் பழமைவாதம், ஆனால் உளவு பார்க்க வந்தால் சுறுசுறுப்பு” என கடுமையாக சாடியுள்ளார்.