மூத்த தமிழ் நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நெப்போலியனின் மகன் தனுஷ், தனது மனைவி அக்ஷயாவுடன் இரண்டாவது முறையாக ‘அமெரிக்க பாணியில்’ திருமணம் செய்துள்ளார்.

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுஷின் சிகிச்சைக்காக நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குத் தங்கியிருப்பதுடன், முதல் திருமணம் கடந்த 2024 நவம்பரில் ஜப்பானில் நடைபெற்றது. தற்போது, அமெரிக்காவின் நாஷ்வில்லில் உள்ள ஸ்ரீ கணேசர் கோவிலில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், அரசு அங்கீகாரம் பெற்ற அதிகாரி மூலம் இந்த ‘திருமண விழா’ நடத்தப்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)

“>

இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்க கலாசாரத்தை பின்பற்றி நடைபெற்ற திருமணத்தில், கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டதுடன், சிறப்பு சடங்குகளும் இடம்பெற்றன.

கடந்த ஜப்பான் திருமண விழாவில், கார்த்தி, சரத் குமார், மீனா, குஷ்பு, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 150 விருந்தினர்கள் அந்த விழாவிலும் கலந்து கொண்டனர். அந்நிகழ்வின் போது நெப்போலியன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

 

View this post on Instagram

 

A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)

“>

தனுஷ் – அக்ஷயா தம்பதியரின் முதல் திருமணத்தில் ஹால்டி, மெஹந்தி, சங்கீத் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. இப்போது, அமெரிக்காவில் நடைபெறப்பட்ட இந்த இரண்டாவது திருமணம், அவர்களது வாழ்க்கையின் புதிய கட்டத்தை உறுதி செய்யும் வகையில் நடந்தது. தனுஷ் தற்போது தன்னுடைய மருத்துவ சிகிச்சைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறார்.

நெப்போலியன், 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாகவும் ஹீரோவாகவும் புகழ்பெற்றவர். இவர் “பரதன்”, “எஜமான்”, “தர்ம சீலன்”, “போக்கிரி”, “தசாவதாரம்” உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ள நெப்போலியன், 2001-06 வரை திமுகவில் இருந்தார்.

பின்னர் 2009-14 வரை பெரம்பலூர் மக்களவை உறுப்பினராகவும், 2014இல் பாஜகவில் இணைந்தார். தற்போது, தந்தையாக தனது மகனின் வாழ்வில் நடந்த முக்கிய தருணங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.