உத்தரகண்ட் மாநிலத்தில் இடியுடன் கூடிய கனமழையும், அதனோடு இணைந்த மேக வெடிப்பும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஹர் கி பவுரி பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, அவர்கள்மீது திடீரெனெ எதிர்பாரா விதமாக மலை இடிந்து பாறைகள் விழுந்தன. அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினர். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் சாதாரணமாக பயணிக்கும் மூன்று இளைஞர்களின் மோட்டார் சைக்கிள், சில நொடிகளில் பாறைகள் மற்றும் மண்மேட்டுகள் இடிந்து மோத, வாகனம் சறுக்கி தரையில் விழும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
VIDEO | Uttarakhand: Lucky escape for two youths on bike as landslide debris fall over them in Haridwar.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/XCmITthdot
— Press Trust of India (@PTI_News) August 6, 2025
“>
இந்த இடிபாடுகளின் தாக்கம் மிகுந்தது என்பதாலும், அவர்கள் நூலிழையில் தப்பிய விதம் பார்ப்போரை பீதியடைய வைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் உத்தரகாசியில் ஏற்பட்ட மிகப்பெரிய மேக வெடிப்பால், இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் விளைவாக, ஹரித்வார்–டேராடூன் இடையிலான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
