அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை (ஆகஸ்ட் 7) காலை ராஜபாளையத்தில் பங்கேற்க இருந்த உள் அரங்கு கூட்டம் உடல்நலக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய காலநிலை மாற்றத்தால் அவருக்கு உடல் சோர்வு மற்றும் தொண்டைவலி ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து மருத்துவ ஆலோசனையின் பேரில் ஓய்வெடுத்து வருகின்ற எடப்பாடி பழனிசாமி, நாளைய கூட்டங்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.