கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலிபோனியாவின் வென்ச்சுராவில் உள்ள பியர்பாண்ட் கடற்கரையில் திடீரென அலைகள் சீறிப்பாய்ந்தது. அதாவது கடற்கரையில் சிலர் அமைந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து நீர் சீறிப்பாய்ந்து குடியிருப்புகளுக்குள் நுழைந்தது. இதனால் அங்கு இருந்த மக்கள் அலறி அடித்து ஓட தொடங்கினர்.
View this post on Instagram
இதில் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் கடல் அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
