சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்படவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் பயணிகள் பதட்டம் அடைந்தனர். 73 பயணிகளுடன் புறப்படவிருந்த இந்த விமானம், புறப்படத் தயாராக இருந்த தருணத்தில் ஓடுபாதையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் அவசரமாக சோதனை மேற்கொண்டனர்.

காலை 5.45 மணிக்கு புறப்படவிருந்த இந்த விமானம், கோளாறை சரிசெய்து சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு புறப்பட்டது. பயணிகள் பாதுகாப்பிற்காக அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தால் சில பயணிகள் இடைப்பட்ட இணைப்பு பயணங்களை தவறவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.