உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தின் தாராலி என்ற கிராமத்தில் சக்திவாய்ந்த மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரழிவில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவும் வெள்ளமும் ஒரே நேரத்தில் தாக்கியதால், முழு கிராமமும் சேற்றிலும் இடிபாடுகளிலும் மூழ்கியுள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலைக்குள் இருந்து ஒரு நபர் சேற்றில் ஊர்ந்து உயிருடன் வெளியே வருவதை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் இடிபாடுகளின் வழியாக சில அடிகள் நடந்து, பிறகு நிலைவிழுந்து சேற்றில் ஊர்ந்து செல்லும் போது, பின்னணியில் உள்ளவர்கள் “ஓடு! ஓடு!” என அவரை ஊக்குவிக்கும் குரல்களும் கேட்கின்றன. பின்னர் மற்றொரு நபர் அருகில் ஓடிச் செல்கிறார். காணொளியின் கடைசியில் “அவனையும் இழுத்து வெளியே கொண்டு வா” எனக் கூறும் குரலும் பதிவாகியுள்ளது.
जिंदगी जिंदाबाद। धराली आपदा के बाद कुछ इस तरह बचकर निकला एक शख्स… #Dharali #uttarkashi #Flashflood #cloudburst #Uttarakhand pic.twitter.com/7R7gHjjuHB
— Ramesh Bhatt (@Rameshbhimtal) August 5, 2025
“>
இந்த வீடியோ மக்கள் மனங்களை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேக வெடிப்பால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து தப்பிச்செல்வது சாத்தியமா என பலர் அதிசயிக்க, மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதுகாப்பு படைகள், மீட்புக் குழுக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தற்போது பிழைத்தவர்கள் மற்றும் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் முகமைவீண்டும் தயார் நிலையில் செயல்பட்டு வருகின்றன.
