புனே நகரம் டிங்ரே பகுதியில், வன்கொடுமையான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெருவில் காணப்படும் நாய்கள், தொடர்ந்து காணாமல் போய்வரும் சூழலில், சிசிடிவி வீடியோவில் ஒருவரது அதிர்ச்சிகரமான செயல்கள் பதிவாகியுள்ளன.

35 வயதான கர்நாடகாவை சேர்ந்த தொழிலாளி மல்லப்பா ஹோஸ்மானி, ஒரு பெண் நாயை தகரக் கொட்டகைக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ‘அனிமல் ஹேவன்’ எனும் விலங்கு நல அமைப்பின் உறுப்பினர்கள் ராகினி மோர் மற்றும் மிருதுலா வாக்மரே ஆகியோரால் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

பாதுகாப்பு கேமராவில் பதிவான வீடியோவின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் நாயை கட்டாயமாக உள்ளே அழைத்துச் செல்வதும், அதனை தாக்குவதும் தெளிவாக தெரிய வந்தது. ஒரு நபர் நேரில் பார்த்ததும், உடனடியாக தொண்டு நிறுவனத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

“>

 

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, நாயை அடிக்கின்ற நிலையில் மல்லப்பாவை பார்த்துள்ளனர். இதையடுத்து, விஷ்ராந்த்வாடி காவல் நிலையத்தில் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் புதிய குற்றச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், ஏப்ரல் மாதத்திலும் புனே ஹண்டேவாடி பகுதியில் உள்ள மற்றொரு நபர், பெண் நாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்ச்சியாக இந்த வகை சம்பவங்கள் நிகழ்வது விலங்குகள் மீதான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக இருப்பதைக் காட்டுகின்றன. விலங்கு ஆர்வலர்கள், குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்கள் சமூகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.