குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு பெண் தனது 7 வயது மகன் கண்முன்னே கணவரை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் என்பவர் ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சங்கீதா.

இந்த தம்பதியினருக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று காலை முகேஷுக்கும் சங்கீதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சங்கீதா முகேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் மன உளைச்சலில் சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டார். தாயையும் தந்தையையும் இழந்து 7 வயது மகன் கதறி அழுதான். இதுகுறித்த இந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.