சோசியல் மீடியாவில் தினம்தோறும் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அந்த வீடியோக்கள் நகைச்சுவையாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். அந்த வகையில் ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சீவுட்ஸ் நெக்ஸஸ் மாலில் இருக்கும் 7- Eleven என்ற கடையின் சமையலறையில் இருந்து எடுக்கப்பட்டது.

ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட வீடியோவில் ஒரு எலி காபி தயாரிக்கும் எந்திரத்தில் இருந்து ஓடி வருகிறது. மற்றொரு எலி ஐஸ்கிரீம் கூம்பை மெல்லுவதை காணலாம். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதை பகிர்ந்ததற்கு நன்றி. நான் மீண்டும் அந்த கடைக்கு செல்ல மாட்டேன்.

இந்த வீடியோவை கூகுள் மேப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த விவகாரம் கடையின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் வீடியோ தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.