விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் சிறப்பாக நடந்து முடிந்தது. தற்போது தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதற்காக மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரப்பத்தி பகுதியில் மாநாட்டுக்கான பூமி பூஜை நடந்தது. இதனையடுத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகள் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு மனு அளிக்க வந்தனர்.
மாநாடு நடைபெறும் தேதி 25-ஆம் தேதி. ஆனால் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால் அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எனவே மாநாடு நடைபெறும் தேதியை மாற்றியமைக்க வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறையினரின் அறிவுரையை ஏற்று வருகிற 21ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மாநாட்டுக்கான தேவி அறிவிப்பை பகிர்ந்து வருகின்றனர்.
