ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக் இன்று உயிரிழந்தார். இவருக்கு 79 வயது ஆகிறது. உடல் நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யபால் மாலிக் இன்று உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.