இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய பெரும்பாலும் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்துகிறார்கள். அதன்பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமான மக்கள் அதை விரும்புகிறார்கள். இதன் காரணமாக யுபிஐ பண பரிவர்த்தனை முறைகளில் அடிக்கடி புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.

அந்த வகையில் யுபிஐ விதிகளில் புதிய மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பொதுவாக யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்கு 4 இலக்க எண் அல்லது 6 இலக்க எண்ணை பதிவிடுவது அவசியம். ஆனால் இனி இந்தப் பின் நம்பரை பதிவிடாமல் கைரேகை மூலமாக பணத்தை அனுப்பு முறையை கொண்டு வர தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதில் ரகசிய எண்ணை பதிவிடுவதற்கு பதிலாக முகப்பதிவு அல்லது கைரேகை பதிவு மூலமாக பணத்தை அனுப்பும் வசதியை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. மேலும் இது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகு அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.