இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கு புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி. ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 1987 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டால்லியனில் நியமிக்கப்பட்டார். மேலும் இவர் ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளில் பயிற்றுவிக்கும் அமைப்புகளிலும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு சௌவ்ரிய சக்ரா விருதும், 2021 ஆம் ஆண்டு சேனாப்பதக்கம் மற்றும் 2023 ஆம் ஆண்டு அதிதி விஷஸ் சேவா பதக்கமும் பெற்றவர்.
இதுபோன்று பல்வேறு நிலைகளில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களையும், புதுச்சேரி, லட்சத்திவு ஆகிய 2 யூனியன் பிரதேசங்களின் ராணுவ தளபதியாக ஆகஸ்ட் 1ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
