ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் ஒரு பெண் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தபோது, செல்ல நாய் ஒன்று அவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. ஒரு பெண் தனது வளர்ப்பு செல்ல நாயையும் தன்னுடன் அழைத்து வருகிறார். அப்போது எதிரே வந்த பெண்ணை நாய் தீடீரென தாக்கியது அந்தப் பெண் நாயிடமிருந்து தன்னை காப்பாற்ற முயன்றும், நாய் அவருடைய கையை கடித்து விட்டபாடில்லை.. இதனால் பெரும் காயம் ஏற்பட்டதக்க கூறப்படுகிறது.   மேலும்  குருகிராம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வீடியோ, குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் பதிவு செய்யப்பட்டது. இதில், நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணை சுதந்திரமாக உலா வந்த செல்ல நாய் தாக்கியது. அந்த நாய் திடீரென தாக்கியதால், நிலைகுலைந்த அந்த பெண் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் நாய் கையை கடித்து நீண்ட நேரம்  விடவே இல்லை…   சம்பவ இடத்திற்கு அருகிலிருந்தவர்கள் கண்டு பயந்து  அதிர்ச்சியில் உறைந்தனர் .

“>

இருப்பினும் முயற்சி செய்து நாய் கொண்டுவந்த பெண் மற்றும் கூட வந்தர்வர்கள் காப்பாற்றினார்கள். இதுபோல சம்பவங்கள் அதிகரிக்கின்ற நிலையில், செல்ல நாய்களைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.