சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உலா வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதை அப்படியே கொள்ளையடித்து விடுகின்றன.

அந்த வகையில், தற்போது இணையவாசிகளின் தூக்கத்தைக் கெடுத்து, ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் ஆக்கிரமித்துள்ளது ஒரு 2 மாதக் குழந்தையின் கியூட் வீடியோ பொதுவாக இரண்டு மாதக் குழந்தைக்குச் சிரிக்கவோ, அழவோ மட்டும்தான் தெரியும் என்று நாம் நினைப்போம்.

“>

ஆனால், இந்த வீடியோவில் உள்ள மழலை, பெரிய திரை நட்சத்திரங்களையே மிஞ்சும் அளவுக்குத் தன் முகத்தில் விதவிதமான பாவங்களைக் காட்டி அசத்தியுள்ளது. கேமராவைப் பார்த்தவுடன் இந்தக் குழந்தை கொடுக்கும் அசாத்தியமான எக்ஸ்பிரஷன்கள், பார்ப்பவர்களை அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதனால் “இவனுக்கு இப்போதே ஆஸ்கார் விருதைக் கொடுக்கலாம்”, “அடுத்த சூப்பர் ஸ்டார் ரெடி” என்று நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸைக் குவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து, காட்டுத்தீ போலப் பரவி வரும் இந்த வீடியோ, காண்போரின் மன அழுத்தத்தை நொடியில் காணாமல் போகச் செய்து, நெஞ்சைக் கரைய வைத்துள்ளது.