ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் இதற்கு பதிலடி கோவிலுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை கூறி வைத்து அழித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால் பா.சிதம்பரம் தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாகவும் தனது பேட்டியில் இருந்து ஒரு சில வார்த்தைகளை நீக்கிவிட்டு தவறான கருத்தாக்கம் ஏற்படுத்தப்பட்டது என குற்றம் சாட்டியிருந்தார்.

இன்று நாடாளுமன்ற விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.சிதம்பரத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு நர்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கிகள் சாக்லேட்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை.

இதைவிட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்? பயங்கரவாதிகளின் ஆதாரங்களை கேட்பது பாகிஸ்தானை காப்பாற்றுவதற்கான சூழ்ச்சி. ப. சிதம்பரம் பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சி செய்கிறாரா? என மத்திய உள்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆப்ரேஷன் மகாதேவ்வில்  மூன்று பேரை சுட்டுக்கொன்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இனிவரும் காலத்தில் இந்தியாவுக்கு எதிராக யோசிக்க முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்தியுள்ளோம். திருமணமான 6 நாட்களில் கணவனை இழந்த பெண்ணின் வலியை நான் நேரில் உணர்ந்து இருக்கிறேன்.

தொடர்பாக 3000 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மக்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் தான் உள்ளது. ஆனால் உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது? என ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினார். ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி ராஜ்நாத் சிங் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார். அதன் பிறகும் எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்புகிறது.

அதற்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் உள்ளூர் பயங்கரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என சொல்ல பசிதம்பரத்திடம் என்ன ஆதாரம் உள்ளது? ஆப்ரேஷன் சித்தூர் மூலம் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தோம். ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.