மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கார்கர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா சர்மா. இவருக்கு 29 வயது ஆகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு ஸ்வேதா சர்மா உள்வேலி பகுதியில் இருக்கும் தனது தோழி வீட்டிற்கு கொண்டிருந்தார். அவர் கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி சென்றபோது பேலாப்பூர் துருவுதாரா படகு துறைமுக பகுதியில் வைத்து ஸ்வேதா சர்மா பாலத்தின் மேல் காரை ஓட்டி செல்வதற்கு பதிலாக பாலத்தின் கீழ் பகுதி வழியாக சர்வீஸ் சாலையில் சென்றதாக தெரிகிறது.
அப்போது திடீரென பாதை முடிந்து தண்ணீர் வந்தது. சுதாரித்துக் கொண்டு காரை நிறுத்த முயற்சி செய்வதற்குள் கார் கட்டுப்பாட்டை இழந்து கடலின் முகத்துவாரப் பகுதிக்குள் பாய்ந்தது. முன்னதாக காரில் வேகமாக வருவதை அறிந்த ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்பு படையினர் ஸ்வேதாவை எச்சரித்துள்ளனர். அதனை கவனிக்காத ஸ்வேதா காருடன் கடலில் பயந்துவிட்டார். உடனடியாக கடலோர பாதுகாப்பு படையினர் ஸ்வேதாவை பத்திரமாக மீட்டனர். ஆனால் கார் கடலில் மூழ்கியது. பின்னர் கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
