பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, பாலகசார் என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 30 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மற்றும் மீட்பு பணியாளர்கள் இணைந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.