தாய்லாந்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்தான சோகத்தில் தவீசாக்(44) என்பவர் ஒரு மாதமாக உணவு சாப்பிடாமல் பீர் மட்டுமே குடித்து வந்தார். மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த தவீசாக் 100 பாட்டில் பீர் குடித்திருப்பதாக தெரிகிறது. அந்த நபரின் மகன் தனது தந்தைக்காக உணவு சமைத்துக் கொடுத்தாலும் அவர் சாப்பிட மறுத்துள்ளார்.

மாறாக அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தவீசாக் உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியது உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.