திண்டுக்கல் மாவட்டம் நாயக்கன்பட்டி பகுதியில், ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளை அடகு வைத்து பணம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் பணம் பற்றாக்குறையால் ஏராளமான குடும்பங்கள் தங்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை ஒரு பெண்ணிடம் அடகு வைத்துள்ளனர். இதன் அடிப்படையில், அந்த பெண், 20க்கும் மேற்பட்ட கார்டுகளை அடகுவைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில், அந்த பெண், கார்டு உரிமையாளர்களை நேரில் அழைத்து, ரேஷன் கடைக்கு அழைத்து சென்று, அவற்றின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி எடுத்துச் சென்றுள்ளார். இதுபோன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “
வாங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் பின்னர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் உண்மையான கார்டு உரிமையாளர்கள் தவிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த துயரமான சூழ்நிலைக்கு உரிய தீர்வு தேவைப்படுவதோடு, இத்தகைய தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
