மும்பையின் மீரா சாலையில் உள்ள மோசமான சாலை நிலையை கிண்டலாக சுட்டிக்காட்டும் வகையில், ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ சமீபத்தில் வைரலாகியுள்ளது. “மீரா பயந்தர்” என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரக ரோவரை சோதிக்க “மீரா சாலை மார்ஸ்க்கு நிகரானது” என கூறி அந்த தெருவிற்கு வருகிறார்கள் என கற்பனை செய்யப்படுகிறது.
“ஏன் இங்கு வந்தீர்கள்?” என கேட்க, விஞ்ஞானிகள் “மீரா சாலை போல மார்ஸ்லயும் சாலைகள் தான் இருக்கு” என பதிலளிக்க, பார்வையாளர்கள் சிரிக்கும் அளவிற்கு கிண்டலாக அமைந்துள்ளது.
View this post on Instagram
“நாசா மற்றும் டெஸ்லா இங்கு அலுவலகம் திறக்கப் போகிறதாம்!” என்ற தலைப்புடன் தொடரும் வீடியோ, ஆழமான சமூக விமர்சனத்தையும், நவீன நகைச்சுவையையும் இணைத்துள்ளது. குண்டும் குழிகளால் நிரம்பிய தெருக்களில், ரோவரின் சோதனை ஓட்டம் போலவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
AI-உருவாக்கப்பட்ட விஞ்ஞானி அவதாரங்கள், ரியல் பி-ரோல் ஷாட்டுகள், நகைச்சுவையான ஒலிகள் ஆகியவை வீடியோவை மேலும் வைரலாக்கி உள்ளன. இந்த நகைச்சுவை வீடியோ வெறும் கலையல்ல; ஒரு கடுமையான குடிமைப் பிரச்சனையை வெளிச்சமிடும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.
மீரா சாலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள், மழைக்காலங்களில் பெரும் சாலைப் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதிகாரிகள் எச்சரிக்கைகளையும் புகார்களையும் அலட்சியப்படுத்தும் சூழலில், நகைச்சுவை வழியாக கவனத்தை ஈர்க்கும் இந்த AI வீடியோ, சுட்டிகாட்டும் உரையாடலால் பலரது பாராட்டை பெற்றுள்ளது.
