உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் மனிதாபிமானத்தை கேள்விக்குள்ளாக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வயதான பெண் ஒருவர், அவரது குடும்பத்தினரால் இரவு நேரத்தில் சாலையோரத்தில் விட்டுச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், இருட்டான சாலையில், அந்தப் பெண்ணை போர்வையுடன் படுக்க வைத்து விடும் காட்சிகள் தெளிவாக காணப்படுகிறது. சம்பவம் நடந்ததிலிருந்து தொடர்ந்து பேசவோ நகரவோ முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண், மறுநாள் காலை 10 மணியளவில் உள்ளூர்வாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.
रामनगरी अयोध्या में मानवता शर्मसार–
2 महिला और 1 पुरुष, एक बुजुर्ग महिला को ईरिक्शा में लाए। रात के अंधेरे में सुनसान रास्ते पर उतारा और लेटाकर भाग गए। सुबह लोगों की नजर पड़ी। पुलिस ने वृद्धा को हॉस्पिटल में भर्ती कराया। हालत इतनी खराब है कि वो न चलने, न बोलने की स्थिति में है। pic.twitter.com/MGNURxpQx2
— Sachin Gupta (@SachinGuptaUP) July 24, 2025
உடனடியாக தர்ஷன் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை காப்பாற்றும் நோக்கில் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரியில் உள்ள அதிர்ச்சி பிரிவில் சேர்த்தனர். அவருக்கு கழுத்தில் ஆழமான புண் இருந்ததாகவும், அது புற்றுநோயால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த அந்தப் பெண்ணை மீட்டும் உயிர்பிழைக்கச் செய்வதற்கான மருத்துவ முயற்சிகள் தோல்வியடைந்து, மாலையில் அவர் உயிரிழந்தார். தற்போது போலீசார் அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, இ-ரிக்ஷாவில் வந்த மர்ம நபர்களை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.
உறுதியாக அடையாளம் காண முடியவில்லை. அவரின் குடும்பத்தினரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுடன், “தயவுசெய்து இந்த அம்மாவை அடையாளம் காணுங்கள்” எனும் வாசகத்துடன் பகிரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த குடும்பத்தை கண்டறிய காவல்துறைக்கு உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
