திருப்பத்தூர் மாவட்டம் சிக்கனம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி இந்திரா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தற்போது அந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இந்திரா உயிரிழந்தார். இதனால் தனது 13 வயது வளர்ப்பு மகளுடன் மூர்த்தி தனியாக இருந்தார். சம்பவம் நடந்த அன்று மூர்த்தி வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமானார். நாளுக்கு நாள் சிறுமியின் உடல் நலம் மோசமானதை அறிந்த அக்கம் பக்கத்தினர் விவரத்தை அறிந்து குழந்தைகள் பாதுகாப்பு எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி குழந்தைகள் உதவி மையம் மேற்பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்த போது உண்மை தெரியவந்தது.
இதனால் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை செய்து செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
