தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மெயின் ரோடு அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்வின் (33) என்பவர் தனது உறவுக்காரரான அருப்புக்கோட்டையை சேர்ந்த வடிவேல் முருகன் (40) என்பவரை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து ஆஸ்வின் புதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த வழக்கு நீதிபதி ப்ரீத்தா முன்னிலையில் கடந்த ஜூலை 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் திறம்பட வாதிட்டார். இதனை அடுத்து அஸ்வின் மீதான குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த கொலை குற்றம் குறித்து சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, விசாரணைக் உதவியாக இருந்த காவலர் முனியசாமி ஆகியோரை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டியுள்ளார்.