ராஜஸ்தான் மாநிலம் பாலியை அடுத்த பக்தி பகுதியில் உள்ள வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டி, முகமூடி அணிந்த 5 கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த இரவில், அந்த மூதாட்டி தோளிலும், கழுத்திலும் அணிந்திருந்த நகைகளை பறிக்க திடீரென வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், அவர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பெட்ஷீட்டை பயன்படுத்தி கழுத்தை நெரித்துள்ளனர்.

மூதாட்டி தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக உணர்ந்து உரக்க சத்தம் போட, அருகிலிருந்த மகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பயந்த கொள்ளையர்கள் சில நகைகளை பறித்துக்கொண்டு உடனே தப்பி ஓடியுள்ளனர். இந்த தாக்குதலில் மூதாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“>

 

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 5 முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மூதாட்டி தனியாக இருப்பதை குறிவைத்து நகைக்காக உயிரே பறிக்க முயன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பு உபகரணங்களை வலுப்படுத்துமாறு போலீசார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.