தமிழகத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் விடைத்தாள் அடங்கிய கட்டுகள் உடைக்கப்பட்ட புகைப்படங்கள், கேள்வித்தாள்களை பாதுகாப்பற்ற முறையில் ஆம்னி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் என வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பாஸ்கர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தேர்வு முடிவடைந்த நிலையில் ஜூலை 14ஆம் தேதி அனைத்து விடைத்தாள்களும் டெரங்கு பெட்டிகளில் பாதுகாப்பான முறையில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு விட்டன.

விடைத்தாள்கள் முழுவதும் முழுமையான பாதுகாப்பு முறையில் வந்து சேர்ந்துள்ளது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை எனக் கூறினார். மேலும் உடைக்கப்பட்டிருந்த ஆவணம் குறித்த புகைப்படங்கள் குறித்து பேசி அவர், உடைக்கப்பட்டு இருந்த பெட்டிகளில் வேறு ஆவணங்கள் இருந்திருக்கலாம் எந்த ஆவணங்கள் இருந்தன, அதனை யார் செய்தது? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கேள்வித்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்து விட்டதாகவும் அதன் அடிப்படையில் தற்போதைய டிஎன்பிசி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதாவது தற்போதைய நடைமுறையின் படி டிஎன்பிசி கேள்வித்தாள்கள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு தாசில்தார் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் மூலம் எடுத்துச் சொல்லப்படுகிறது.

இனி அந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்களை தாசில்தார்கள் கையாளும் முறையே முற்றிலுமாக தவிர்த்துவிட்டு அந்தந்த தேர்வு மையங்களுக்கும், கருவூலங்களுக்கும் கொண்டு வருவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி நேரடியாக பார்த்துக் கொள்ளும்.

மேலும் அந்தப் பொறுப்புகளை தாசில்தார்களுக்கோ அல்லது வருவாய் அதிகாரிகளுக்கோ ஒப்படைக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ள இந்த புதிய நடைமுறை அடுத்ததாக நடைபெறக்கூடிய தேர்வுகளில் அமலுக்கு வரும் அதனால் தேர்வுகள் நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இருக்கும் என தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.