நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகின்றார். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் பெரிய நடிகர் படம் என்பதாலேயே ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘ரெட்ரோ’ படத்துக்குப் பிறகு சூர்யா நடித்திருக்கும் இந்த படம், அவருடைய 45-வது திரைப்படமாகும். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக திரிஷா முக்கியப் பங்கு வகிக்கிறார். மேலும், ஸ்வாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், கருப்பு சட்டை மற்றும் வேஷ்டியில் மாஸ் லுக்கில் சூர்யா மின்னுகிறார். இந்த லுக் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
Happy Birthday @Suriya_offl sir ❤️
You are the BEST !!! 😍
Wishing you a BLOCKBUSTER year 🔥#Karuppu pic.twitter.com/81nIoGh3gd
— RJB (@RJ_Balaji) July 22, 2025
“>
இன்று (ஜூலை 23) காலை 10 மணிக்கு படத்தின் டீசர் வெளியிடப்பட இருப்பதாக இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அறிவித்துள்ளார். அதற்குமுன், நேற்றிரவு 12 மணிக்கு ‘கருப்பு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில், சிவப்பு சட்டையுடன் இன்டென்ஸ் லுக்கில் சூர்யா காட்சியளிக்கிறார். இரு லுக்குகளும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி, சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளன. டீசருக்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
