குஜராத் மாநிலம் சூரத் நகரத்தைச் சேர்ந்த 63 வயதான ஜைபுன்னிசா எம். என்ற பெண், கடந்த 20 ஆண்டுகளாகக் காது கேட்காத மாற்று திறனாளியாக வாழ்ந்து வந்தார். சிறந்த ஹியரிங் எய்ட்கள், மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் அனைத்தும் முயற்சி செய்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குடும்பத்தினர் கூட அவரிடம் பேசும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டதோடு, ஒவ்வொரு தொலைபேசி அழைப்புக்கும் மற்றோருவரின் உதவி தேவைப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜைபுன்னிசா தன்னுடைய பல் சிகிச்சைக்காக ஒரு பல் மருத்துவரை அணுகியபோது, சிகிச்சைக்கு பிறகு அவர்கள் எதிர்பார்க்காத ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அந்த சிகிச்சையின் போது, பற்கள் சீரமைக்கப்பட்டதுடன், தாடையில் ஏற்பட்டிருந்த நரம்பு அழுத்தங்கள் குறைக்கப்பட்டன. இதன் விளைவாக, காது மற்றும் நரம்புகள் இடையிலான இணைப்பில் இருந்த தடுப்பு நீங்கியதற்காகத்தால், கேட்கும் திறன் மீண்டும் உருவாகியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிகிச்சைக்கு ஒரு நாள் முன் வீட்டில் அமர்ந்திருந்த ஜைபுன்னிசா, திடீரென வீட்டில் குரல்களை கேட்க ஆரம்பித்தபோது, முதலில் அதனை நம்பவே முடியவில்லை. அதனை உறுதிப்படுத்த, தனது கணவனிடம் ஓடி சொல்லியதும், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் செவியில் விழுந்ததை உணர்ந்தார். அதன்பிறகு, அண்டை வீட்டார், மகள் மற்றும் குடும்பத்தினருடன் பேசி பார்த்ததிலேயே, உண்மையிலேயே கேட்கத் தொடங்கிவிட்டார் என்பது உறுதி ஆனது.
அவருடைய மகள் தெஹ்ஸீப், துபாயில் ஒரு கதிரியக்க நிபுணராக பணியாற்றுகிறார். தாயின் சிகிச்சைக்காக சூரத்துக்கு வந்திருந்த அவர், “அம்மா வழக்கமாக பேச மட்டுமே செய்வார்… நாங்கள் கேட்போம்… இப்போது அவரால் நம்மை கேட்க முடிகிறது… இது நமக்கே ஒரு அதிசயம்!” என உருக்கமாக கூறினார். ஜைபுன்னிசாவின் கணவர், ஒருவர் மருத்துவராக இருந்தாலும், “இது வெறும் பல் சிகிச்சையால்தான் நடந்ததா?” என கேட்கும் அளவுக்கு ஆச்சரியத்தில் உள்ளதாகவும், இது கடவுளின் செயல் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மருத்துவ உலகை மட்டுமல்லாது, மக்களிடையிலும் ஒரு நம்பிக்கையின் ஒளியாக உருவெடுத்துள்ளது. “வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. சில நேரங்களில், சிறிய மாற்றங்கள் பெரிய அதிசயங்களை உருவாக்கும்” என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேட்கத் தொடங்கிய ஜைபுன்னிசா – ஒரு மருத்துவ ரீதியான அற்புதத்தின் சாட்சி.
