இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சாலையில் ஒரு இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

 

அப்போது அந்த வழியாக பசுமாடு ஒன்று வந்தது. இதை அடுத்து அந்த மாடு திடீரென இருசக்கர வாகனத்தின் மீது ஏறி அங்கிருந்து வண்டியை எடுத்துச் சென்றது. இது தொடர்பான வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.