ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அப்போது மதுபான விற்பனையில் 3500 கோடி ஊழல் நடைபெற்றதாக ஆந்திர காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோன்று சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மே மாதம் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் காவல்துறையினர் நேற்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டியை கைது செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் 305 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. ஆனால் அவர் மதுபான ஊழல் பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இதில் முதல் குற்றவாளியாக காசிடெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது முந்தைய ஆட்சி காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தனர். மதுபான சப்ளை விற்பனை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, லஞ்சம், கமிஷன் பெற்றனர்.
லஞ்சத்தின் பெரும் பகுதி ரொக்கமாகவும் தங்க கட்டிகளாகவும் பெறப்பட்டது. ரூபாய் 3500 கோடி ஊழலின் மூளையாக முதல் குற்றவாளியாக காசி ரெட்டி ராஜசேகர் ரெட்டி செயல்பட்டார். லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணம் அவரிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அவர் அதனை விஜய் சாய் ரெட்டி, மிதுன் ரெட்டி, பாலாஜி ஆகியோருக்கு அனுப்பி வைப்பார். அதை அப்போதைய முதலமைச்சர் ஜெகன் ரெட்டி மோகன் ரெட்டிக்கு பாலாஜி அனுப்பி வைப்பார். மாத தோறும் சராசரியாக ருபாய் 50 கோடி முதல் 60 கோடி வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
